இயற்கை சீற்ற மேலாண்மை் :: சுற்றுச்சூழல் மாசுபடுதல் 

அளவீடு மற்றும் பகிர்மானம்

அளவீடு
உயிரியல் பல்வகைமை ஒரு பரந்த அடிப்படை ஆதலால் அதன் அளவீட்டிற்காக பல முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தகவல்களை கொண்டு வகுக்கப்படும். சுற்றுப்புற சூழல் வல்லுநர்கள் நடைமுறையில் இதன் அளவீட்டை அந்த பகுதியில் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு பங்களிக்கும் வகையில் அளவிட வேண்டும். மற்றவர்களுக்கு சுற்றுச்சுழல் நிலைப்படுத்தப்படும் முறையில் மக்கள் ஏற்றுக்கொண்டு எதிர்காலத்தில் உபயோகிக்கும் வகையில் உள்ள சாத்தியக்கூறுகள் கொண்டதாக இருக்க வேண்டும்.


வட துருவத்தின் அருகில் ஆர்க்டிக் பெருங்கடலின் கடல் பனியில் உள்ள பனிக்கரடிகள்.


உயிரியல் வல்லுநர்கள் விவாதம் செய்வது என்னவெனில் இம்முறை அளவீடு பலவகையான மரபணுக்களை கொண்டுள்ளது என்பதால் எந்த மரபணு பயனளிப்பது என்பதை கண்டறிவது கடினம் ஆதலால் பாதுகாப்பான சூழலிற்கு அதனோடு தொடர்பு கொண்ட மரபணுக்களின் நிழலையை கருத்தில் கொள்ள வேண்டும் சூழலியன் வல்லுநர்களுக்கு இம்முறை தடங்கள் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. ஏனெனில் அது சூழலியல் தொடர்பினை தடுக்கின்றது.
உயிரியல் பல்வகைமையானது அந்த புவியியல் பகுதியில் உள்ள வகைப்பாட்டின் செறிவினை கொண்டு வரைவு செய்யப்படுகிறது. விட்டேக்கர் என்பவர் சிற்றின பல்வகைமையை அளவீடு செய்யும் மூன்று முறைகளை வகுத்தார்.

  • சிற்றின செறிவு
  • சிம்ஸன் குறியீடு
  • சன்னன் - வீயன்னர் குறியீடு

சூழிலியல் வல்லுநர்கள் உபயோகிக்கும் மேலும் மூன்று குறியீடுகள்,

  • ஆல்பா பல்வகைமை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி இனம் மற்றும் சூழலிடத்தில் உள்ள வகைப்பாட்டின் எண்ணிக்கையை கூட்டி அளவீடு செய்யப்படுகின்றது
  • பீட்டா பல்வகைமை என்பது சூழிலடங்களுக்கு இடையே உள்ள சிற்றின வகைமையாகும். இது ஒவ்வோர் சூழிலடங்களுக்கு இடையே உள்ள சிற்றின வகைப்பாட்டின் எண்ணிக்கையை ஒப்பிடுதல் மூலம் அளவீடு செய்யப்படும்
  • காமா பல்வகைமை என்பது ஒரு பகுதியில் உள்ள பல்வேறு சூழிலிடங்களில் ஒட்டு மொத்த வகைமையில் அளவீடு ஆகும்.

3. பகிர்மானம்:
உயிரியல் பல்வகைமை உலகில் ஒரு சீராக பகிர்ந்து இல்லை. அது பொதுவாக வெப்ப மண்டலம் மற்றும் கேப்ஃபளோரிஸ்டிக் மாகாணம் போன்ற இடங்களில் பலவகைப்படடது. துருவ எல்லைகளில் கவனித்தால் சில வகை உயிரினங்களே காணப்படும். தாவர மற்றும் விலங்கினங்களின் பல்வகைமை அங்குள்ள சுற்றுச்சூழல் கடல்மட்ட உயரம் மற்றும் பிற சிற்றனங்களின் இருப்பு போன்றவற்றை கொண்டு அமையும்.

 

சுவிஸ் ஆல்பஸ் (தேசிய பூங்கா) வில் உள்ள ஊசி இலை காடுகள்

2006 ம் வருடம் உலகின் சிற்றினங்களில் பல எண்ணிக்கைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டது. அரியது (அ) அழியும் அபாயம் உள்ளது (அ) அழியும் அச்சத்தில் உள்ளது மேலும் பல வல்லுநர்கள் சிற்றினங்களின் மில்லியன் எண்ணிக்கையில் அழியும் அபாயத்தில் உள்ளது எனவும் அவை முறையாக கண்டறியப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். IUCN (ஐயுசிஎன்) ன் சிகப்பு பட்டியலில் உள்ள 40, 177 சிற்றினங்களில் 40 சதவிகிதம் (16, 119 சிற்றினம்) அழியும் அச்சத்தில் உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமத்திய ரேகை முதல் துருவங்கள் வரையில் பல்வகைமை குறைந்தாலும் இதே போல் நீர்நிலை சூழிடலங்கள் மற்றும் கடல்களிலும் உள்ளது என்பது நிரூபிக்கப்படாமல் உள்ளது. மேலும் கடல் வாழ் சூழிடலத்தில் உயர நிலநோக்கோட்டில் பல்வகைமை அதிகரிக்கின்றது. வெப்பமண்டலங்கள் மற்றும் துருவு எல்லைகளில் உள்ள பல்வகைமை பற்றிய தகவல் குறைவாக உள்ளதால் இதனை பற்றிய அறிவியல் பூர்வமான முடிவு செய்வது தடையாக உள்ளது. பல்வகைமையின் முக்கிய தளம் (hot spot) என்பது அதிக அளவு அங்கேயே நிறர்தரமாக இருக்கக்கூடிய சிற்றினங்கள் கொண்ட இடமாகும். டாக்டர் .நார்மன் மேயர்ஸ் என்பவரால் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வகையை முக்கிய தளங்கள் பற்றிய கட்டுரைகள் “தி எண்விரான்மென்டலிஸ்ட்” என்ற ஆராய்ச்சி மலரில் வெளியிடப்பட்டது. இந்த தளங்களின் அருகிலேயே அதிகமான மனிதர்களின் வாழிடம் அமைந்துள்ளது. இத்தளங்கள் வெப்ப மண்டலங்களிலேயே காடுகளாக அதிகம் உள்ளன.

ப்ரேசிலில் உள்ள அட்லாண்டிக் காடு பல்வகைமையின் முக்கிய தனமாகும். இங்கு 20,000 தாவர சிற்றினங்கள் 1350 எலும்பு கொண்ட விலங்கினங்கள் மில்லியன் கணக்கில் பூச்சி இனங்கள் ஆகியவை உள்ளன. இவற்றுள் 50 சதவிகிதம் கூட உலகின் எங்கும் காணமுடியவில்லை மடகாஸ்கர் தீவில் உள்ள சருகு இலையுதிர் காடுகள் மற்றும் தாழ்ந்த மழைக் காடுகள் ஆகியவை அதிகமாக பல்வகையை கொண்ட சிற்றினங்கள் கொண்டுள்ளது. இந்த தீவு ஆப்ரிகா கண்டத்திலிருந்து 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டதால் ஆப்ரிக்கா காடுகளில் உள்ள உயிரினங்களின் வேறுபட்ட சிற்றினங்கள் இங்கே தோன்றியுள்ளன. அதிக பல்வகைமை கொண்ட தளங்கள் அனைத்தும் முக்கிய வாழிடங்களில் ஒத்துப்போகும் தன்மையை வளர்த்துக் கொண்டவைகளில் இருந்தே தோன்றியது உதாரணமாக வட ஐரோப்பாவின் மக்கு மண் இவ்வகையில் தோன்றியது தான்.

பரிமாணம்
நான்கு மில்லியன் வருடங்களாக ஏற்படும் பரிமான வளர்ச்சியே இன்று பூமியில் உள்ள உயிரியல் பல்வகைமைக்கு காரணமாகும். உயிரினங்களின் தோற்றம் அறிவியல் கூற்றுப்படி நிரூபிக்கப்படவில்லை எனினும் பூமி தோன்றிய பின் சில நூறு மில்லியன் ஆண்டுகளில் உயிர் தோன்றிவிட்டது என சில ஆதாரங்கள் கூறுகின்றன. 600 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில் உயிரினங்கள் அனைத்தும் ஆர்க்கியா, பாக்டீரியா, ப்ரோடோசோன் மற்றும் ஒரு செல் உயிரினங்களாகவே இருந்தன.

பல்வகைமையின் சரித்திரத்தை நோக்கினால் பெனரோசோயிக் (இறுதி 540 மில்லியன் வருடங்கள்) காலகட்டத்தின் கேம்பிரியன் காலத்தில் - அனைத்து பல செய் உயிரினங்களும் தோன்றியுள்ளன. அதன் பின்னர் 400 மில்லியன் ஆண்டுகளில் உலக பல்வகைமை சிறிதளவு மாற்றங்களுடன் ஒவ்வோர் காலகாட்டத்திலும் அதிகமாக பல்வகைமை இழப்புகளுடன் தோன்றியுள்ளது.

இங்கு படத்தில் கானும் பலவகைமை பற்றிய தொல்லுயிர் எச்சத்தின் பதிவின்படி தற்போதுள்ள சில மில்லியன் வருடங்கள் தான் உலக சரித்திரத்தின் அதிக பட்ச பல்வகைமையை தெரிவிக்கின்றது. ஆயினும் அனைத்து வல்லுநர்களும் இக்கருத்தினை ஆமோதிப்பதில்லை ஏனெனில் தற்போதைய நிலவியல் பாகங்களினால் தொல்லுயிர் எச்சங்கள் அதிகளவு வேறுபாடுகளை கொண்டுள்ளது. சிலர் விவாதிப்பது என்னெவெனில் நவீன பல்வகைமைக்கும் 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் உள்ள பல்வகைமைக்கும் அதிகமாக வேறுபாடு இல்லை (அல்ராய் மற்றும் குழு 2001). தற்போதைய உலக பேரினங்களின் பல்வகைமை 2 மில்லியன் முதல் 100 மில்லியன் சிற்றினங்களாக வேறுபடுகின்றது. அதனில் சிறந்ததாக 13-14 மில்லியன் ஆகும்.

பல உயிரியல் வல்லுநர்கள் ஒப்புக்கொள்வது என்னவெனில் மனிதர்கள் தோன்றிய காலமே அதிகமாக அழிவுகள் தொடங்கியது எனவும் ஹோலோசீன் அழிவு நிகழ்வுகள் போன்றவை மனிதர்கள் சுற்றுப்புறத்தினை தாக்கியதால் உண்டாவது எனவும் கூறுகின்றனர். தற்போதுள்ள அழிவுகளின் அளவின்படி இன்னும் 100 வருடங்களில் பூமியில் உள்ள அதிகமமான உயிரினங்கள் அழிந்துவிடும். புதிய சிற்றனங்களும் அடிக்கடி கண்டுபிடித்த வண்ணம் உள்ளது (சராசரியாக ஒரு வருடத்தில் 5-10,000 புதிய சிற்றினங்கள் அதிகமாக பூச்சிகள்) இவை கண்டுபிடிக்கப்பட்டாலும் அவற்றின் பாகுபாடு செய்யப்படவில்லை (90 சதவிகிதம் ஆர்த்ரோபோடுகள் பாகுபாடு செய்யப்படவில்லை). நிலத்தின் பல்வகைமை வெப்ப மண்டல காடுகளில்தான் அதிகமாக கண்டறியப்பட்டுள்ளது.

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015